சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 188 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

இன்று காலை 9 மணிக்கு பிளஸ்1தேர்வு முடிவுகள் வெளியானது. இதில்  91.3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதம் பேரும், மாணவிகள் 94.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் 80.21 சதவிகித தேர்ச்சி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.   இந்த தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

மதிப்பெண் பட்டியலை தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் ஜூன் 4ம் தேதி முதல் மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜூலை 5ம ஆம் தேதி தொடங்கும் எனவும், இதுக்குறித்து முழுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.