ட்டி

ரண்டாம் சீசனுக்கான நடவுப்பணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்கி உள்ளது/

தினசரி நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என்றாலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. மீண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.

முதல் சீசன் போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

இரண்டாம் சீசனுக்கான நாற்று நடவு பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா மலர் நாற்றுக்கள் நடவு பணிகளை தொடங்கி வைத்தார்., இரண்டாம் சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி கோல்டு, பிரெஞச்‌ மேரிகோல்டு, ஆஸ்டர்‌, வெர்பினா, ஜூபின்‌, கேணீடிடப்ட்‌, காஸ்மஸ்‌, கூபியா, பாப்பி, ஸ்வீட்‌ வில்லியம்‌, அஜிரேட்டம்‌, கிரைசாந்திமம்‌, கலண்டுலா, லெக்கைசம்‌, சப்னேரியா போன்ற 60 வகைகளில்‌ பல்வேறு வகையான விதைகள்‌ பெறப்பட்டு சுமார்‌ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள்‌ இரண்டாவது சீசனுக்காக மலர்ப்பாத்திகளில்‌ நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இரண்டாம்‌ சீசனுக்காக செப்டம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ மலர் அலங்காரங்கள் தொடங்கப்படவுள்ளது. இதனை காண சுமார்‌ 3 லட்சம்‌ சுற்றுலா பயணிகள்‌, பொதுமக்கள்‌ செப்டம்பர்‌ மற்றும்‌ அக்டோபர்‌ மாதங்களில்‌ வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது