நெட்டிசன்

Narayanan Kannan is with Olivannan Gopalakrishnan and  3 others – முகநூல் பதிவு

Oh Baby! என்றொரு தமிழ்ப் படம் வந்திருக்கிறது, பாருங்கள்! என்றொரு பரிந்துரை. நானும் Netflixல் தேடு, தேடு என்று தேடினேன், கிடைக்கவில்லை. கூகுளிடம் கேட்ட போது, அது சொன்னது, இப்படம் Miss Granny எனும் 2014 கொரிய படத்தின் ரீ மேக் என்று. சரி, மூலத்தையே பார்த்துவிடுவோம் என்று கொரிய படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

கொரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. இப்படம் பார்த்தாலே போதும். என்னிடம் நிறைய தமிழ்ப் பெண்கள் இது பற்றி சமீப காலத்தில் விசாரிக்கின்றனர். காரணம், கொரிய விழுமியங்கள், பேச்சு, நடை, பாவனை, மொழி எனப்பலவும் நமக்கு நம்மையே காட்டுவது போல் கொரியப் படங்கள் உள்ளன என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் கருத்து. நிச்சயம் அதில் உண்மை இருக்கிறது என்பேன்.

இதே படத்தை ஒரு ஜப்பானியர் எடுத்திருந்தால் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வேறு மாதிரி எடுத்திருப்பர். அந்தத் திசையிலேயே கொரியா மிக வித்தியாசமான தேசம். உரக்கப் பேசும் அஜும்மா, கொரிய மொழியை இழுத்து, அழுத்திப் பேசும் கொடுந்தமிழ் போன்ற நடை, எதிலும் ஒரு நாடகம், உறைக்கும் உணவு (கிம்சி) இப்படி.

பிரான்சிலிருந்து தமிழகம் வந்த ஆய்வாளர் எலிசபெத் பானு என்னிடம் அடிக்கடி சொல்வது, சும்மாவேனும் இந்தப் பேருந்தில் ஒருமுறை போய் வந்தால் போதும், அத்தனை டிராமா பார்க்கலாமென்று! We are very dramatic people. We speak loud. We use lots of body language. ஜப்பானியர் அப்படி அல்ல. ஒரு பண்பாட்டு அழுத்தம் மேவ அவர்கள் அடக்க ஒடுக்கமாக இருப்பர். அது செயற்கையானது என்பேன் நான்.

ஏனெனில் ஜப்பானியரும், கொரியரும் நமக்கு ரத்த பந்தம். கொரியன் தமிழன் போல் இருக்கிறான், ஜப்பானியன் ஆங்கிலேயன் போல் நடிக்கிறான்.

இந்தப்படத்தில்தான் எத்தனை டிராமா! ஒரு சின்ன விஷயத்தைக் கூட நீட்டி முழக்கி எங்க ஊர் கிழவிகள் பேசுவது போல்! நகரத் தமிழர்கள் வெகுவாக மாறிவிட்டனர். கொரியாவில் கூட நகரத்தில் இந்த பாவனைகளைக் காணுதல் அரிது. தமிழன் பண்பாடு கிராமத்தில் உள்ளது. கொரியப் பண்பாட்டிற்கும் அது பொருந்தும்.

உபதலைப்பு கீழே வருகிறது. அது இல்லையென்றாலும் படம் நமக்குப் புரியும். கட்டாயம் பாருங்கள்!

Korea Tamil Relationship: https://www.youtube.com/user/drnkannan