டெல்லி:  சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? தாஜ்மகாலில் பூட்டிய அறைகளில் இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த  உ.பி. நீதிமன்றத்தில் பாஜக மனு செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். இதை அவர் தன் மனைவி மும்தாஜின் நினைவாக 1653 ஆம் ஆண்டில் ஆக்ராவில் கட்டிமுடித்தார். தாஜ்மஹால், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது அமைந்துள்ள இடம் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறையினரால் (ஏஎஸ்ஐ) ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதன் பாதுகாப்பின் பொறுப்பு தேசியப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள இடம்,   தேஜோலாயா எனும் சிவன் கோயில் இருந்த இடம் என்றும், அந்த கோவிலை ஷாஜகான்  இடித்துவிட்டு அதன்மேல், தாஜ்மஹாலை கட்டியதாக  பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. மேலும், தாஜ்மஹாலில் உள்ள 22அறைகள் மூடப்பட்டு இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதை திறந்து பார்க்க உத்தரவிடக்கோரி, உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியின் செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ்சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார். மனுவில், பூட்டி வைக்கப்பட்டுள்ளன அறைகளில்  இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? எனத் திறந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் பாஜகவினரால் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவுடன்,  ஆதாரமாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்புகளும் நீதிமன்ற மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், தாஜ்மகால் இருந்த இடத்தில் அதற்கும் முன்பாக சிவன் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.