கமதாபாத்

குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடாப்பட்ட வழக்கு குஜராத் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

ஜாகியா ஜஃப்ரி

கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ராவில் ரெயில் பெட்டி எரிக்கப்பட்டது.  அதை தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.  நூற்றுக் கணக்கானோர் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.  அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாஃப்ரியும் அடங்குவார்.   இந்த கலவரங்களுக்கு பின்னணியில் அப்போதைய முதல்வர் மோடி இருந்ததாக பலரும் குற்றம் சாட்டினர்.  இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை உச்ச நீதி மன்றம் அமைத்தது.   அந்தக் குழு மோடி மற்றும் பலருக்கு இந்த கலவரத்தில் சம்மந்தம் இல்லை என அறிவித்தது.

இதை எதிர்த்து மரணமடைந்த இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜஃப்ரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இந்த வழக்கு கடந்த மூன்று வருடங்களாக விசாரிக்கப் பட்டு வந்தது.   இறுதி வாதங்கள் மே 9 ஆம் தேதி முடிந்த நிலையில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.  இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி அளித்த வழக்கு மனு உயர்நீதி மன்றம் நிராகரித்துள்ளது.   மேலும் இந்த வழக்குக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.