சென்னை
சென்னையில் 4 ரயில் நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளாட்பார்ம் டிக்கட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி விட்டனர்.
தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக, 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க்குகிறது. இவற்றில், தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆகவே, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில்வரும் 29,30 ஆகிய தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel