சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காலங்களில் ரயில் பணிகளை வழியனுப்ப வரும் உறவினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பிளாட்பார டிக்கெட்டுகளை ரெயில்வே கடுமையாக உயர்த்தியது. அதன்படி, ஒரு பிளாட் பாரம் டிக்கெட் விலை ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், பலர் ரயில் நிலையத்திற்குள் வருவதை தவிர்த்தனர்.
தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், ரயில்களும் சிறப்பு ரயில் என்பதை அகற்றி விட்டு, பழைய முறைப்படி சேவைகள் தொடங்க உள்ளது.
இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10ஆக குறைக்கப்பட்டு உள்ளது.