சென்னை:
தமிழகம் முழுவதும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள், தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது என தத்துவம் பேசினார்.

கடந்த ஆண்டு(2018) ஜூன் 5-ம் தேதி அன்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து 6 மாத கால அவகாசத்திற்கு பின், 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு அமல்படுத்தப்பபட்டு வருகிறது.
இதற்கிடையில் , தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது. அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கணவன் – மனைவி போல இருந்த மக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் விவாகரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லாதது. பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது ஒரே நாளில் சாத்தியமில்லைஎனவும் எனவும் கூறினார்.
அவரிடம் செய்தியளார்கள் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மீது சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை என்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் அரசின் இதயம் போன்றவர்கள் , அரசு அவர்களை மதிக்கிறது என்றும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]