Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவலைக்கிடம்… பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

Jun 19, 2020

டெல்லி:

தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட  டெல்லி அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14ந்தேதி) ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர  ஜெயின் மற்றும் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சத்யேந்திர  ஜெயினுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என தெரிய வந்ததும் உடனடியாக டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அங்கு அவரால் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது  அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்மா தெரபி அளிக்கும் வகையில், அவரை தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் சாக்கெட் வசதிக்கு மாற்றப்படுவார் என்று தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post navigation

சென்னையில் விதிகளை மீறி ஊர்சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்…
வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறப்பு… மாவட்ட ஆட்சியர் அதிரடி

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer