ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம்!

Must read

வள்ளியூர்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர்  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அதிக அளவிலான காற்றாலை மின்உற்பத்தில், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள  அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. அதனால் இந்த பகுதிகளில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிற்து. மேலும்,  ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க  திட்டமிட்டு உள்ளதாக கூறியவர்,. இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும் என்றார்.

எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article