இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிழை. டர்னிங் பாய்ண்ட் புரொடெக்‌ஷன்ஸ் சார்பில் ஆர் தாமோதரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பைசல் இசையமைத்துள்ளார்.

காக்கா முட்டை புகழ் ரமேஷ், அப்பா பட புகழ் நசாத், மைம் கோபி, சார்லி, கோகுல், தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.