டெல்லி: ஆதார், பான், டான் என அனைத்தையும் இணைத்து ஒரே அடையாள அட்டை வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பயன்படும் வகையில், ஆதார், நிரந்தர கணக்கு எண் (பான்), மற்றும் வரி விலக்கு மற்றும் வசூல் கணக்கு எண் (TAN) போன்ற பல அடையாள எண்களை ஒன்றிணைத்து  ஒரே அடையாள எண்ணை உருவாக்க வேண்டும் என்றும்,  இதனால் சேவைகளை வழங்குவது சீராகவும் வேகமாகவும் இருக்கும் என்று வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

இணக்க சுமையைக் குறைப்பதற்கான அடுத்த கட்ட சீர்திருத்தங்கள் குறித்த தேசியப் பயிலரங்கு நேற்று (டிசம்பர் 22ந்தேதி) டெல்லியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்புரை ஆற்றினார். அப்போது,

மக்களின் சுமையை கணிசமாகக் குறைக்கக்கூடிய பெரிய சீர்திருத்தங்களைச் செய்யக்கூடிய  நிலையில் அரசாங்கம் இப்போது இருப்பதாக கூறியவர்,  வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு செயல்படுத்திய அனைத்து முந்தைய பயிற்சிகளின் மூலம் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட இணக்கங்கள் அரசாங்கத்தால் குறைக்கப்பட்டுள்ளன என்று என்று தெரிவித்தார்.  இப்போது, பெரிய சீர்திருத்தங்கள் செய்யும் நேரம் உருவாகியுள்ளது.  அதன்படி,  தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான ஒற்றை அடையாள எண்  குறித்து சிந்திக்க வேண்டியது உள்ளது.

ஏற்கனவே, இதுதொடர்பாக கொள்கை வகுப்பாளர்களால் சில ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இந்த யோசனைகளுக்கு  வணிகங்களிடையே  வரவேற்பு உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே அதன் வளர்ச்சி குறித்து பேச முடியும் என்றவர்,   இணக்க முறைகளை மேலும் சிக்கலாக்குவதற்குப் பதிலாக, அதை எளிதாக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு  அரசாங்க முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்று பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள  டிஜி லாக்கர் மற்றும் தேசிய ஒற்றை சாளர அமைப்பு போன்ற பல்வேறு சேவைகளை ஒன்றிணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியவர், இதன்மூலம்  தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களின் அனுமதி போன்ற பயன்பாட்டின் போது, அதற்கான இடைவெளிகள் குறைக்கப்படும் என்றார்.

ஒரு நிறுவனத்துக்கோ, தனிநபருக்கோ  சேவைகளை வழங்க திட்டமிடும்போது, ​​குறிப்பாக தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டிருந்தால், வருமானம், எழுத்தறிவு நிலை மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை, குறிப்பாக இணைப்பில் உள்ள இடைவெளிகளை கருத்தில் கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளர்களை  கேட்டுக்கொண் அமைச்சர்,  லீகல் மெட்ராலஜியை குற்றமற்றதாக்குவது அவசரத் தேவை என்றும்  கூறியவர்,  துறையில் முக்கிய முயற்சிகளுக்கான கண்காணிப்பு பொறிமுறையைப் பொறுத்தவரை, கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கண்காணிப்பது, முன்முயற்சிகள் தீர்க்க முயலும்போது, அது  அடிப்படைப் பிரச்சனையை விட சிக்கலானதாக இருக்கக்கூடாது என்று  வலியுறுத்தினார். சிக்கலானதாக நிரூபணமான இணக்கங்களின் விவரங்களைக் கண்டறிய கொள்கை வகுப்பாளர்களை அவர் வலியுறுத்தினார்.

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் என பேசிய அமைச்சர் கோயல், சுய-சான்றளிப்பு, சுய-சான்றிதழ் மற்றும் சுய-ஒழுங்குமுறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் கோயல் அழைப்பு விடுத்தார். “குடிமக்களின் நேர்மையை நம்பி இணக்க அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டிய நேரம் இது ,  அரசியல் தலைமை, அதிகாரத்துவம் மற்றும் தொழில்துறைத் தலைமை ஆகியவை, எளிமை மற்றும் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இணக்கச் சுமையைக் குறைக்க தங்கள் முன்முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு  வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் நாட்டில் பெரிய  சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்  அழைப்பு விடுத்த அமைச்சர், புதிய கட்டமைப்புகள் மக்களைக் கட்டுக்குள் வைக்கக்கூடாது என்று கூறினார். பங்குதாரர்களிடையே தகவல் சமச்சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய கோயல், இணக்கச் சுமையைக் குறைப்பதில் இதுவரை பெற்ற ஆதாயங்களை ஒருங்கிணைக்க அனைவரும் இணைய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) செயலாளர் அனுராக் ஜெயின், “குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் மனிதாபிமானமாகவும், உணர்திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும். அரசுத் துறைகள் உண்மையான குறைகளை மனித முகத்துடன் கையாள வேண்டியது அவசியம்” என்று என்றும், விதிகள் மற்றும் நடைமுறை அம்சங்கள் காரணமாக குறைகளை முழுமையாக தீர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், புகார்தாரருக்கு அதை உணர்வுபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டில் நடந்த விவாதத்தின்போது உருவான யோசனைகள் தொடர்பான அறிக்கை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.