கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.
பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார்.
பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்.
நடிகர் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க, உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.