தெலுங்கு சினிமாவில் மன்னனாக கோலோச்சிய என்.டி.ராமராவ், அந்த தேசத்தின் முதல்-அமைச்சராகவும் மக்களை ஆண்டார்.
அவரது வாழ்க்கை வரலாறு “என்.டி.ஆர்.கதாநாயகுடு” “என்.டி.ஆர். மகாநாயகுடு” என்ற பெயரில் இரு படங்களாக தயாரிக்கப்பட்டது.
இரண்டு சினிமாக்களிலும் என்.டி.ஆராக, அவர் மகன் பாலகிருஷ்ணாவே நடித்திருந்தார்.
சில படங்களில் என்.டி.ஆர். பீஷ்மராக நடித்துள்ளார். “என்.டி.ஆர். கதாநாயகுடு” படத்திலும் ‘பீஷ்மர்’ வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.
ஆனால் படத்தின் நீளம் கருதி பீஷ்மர் வேடத்தை “கதாநாயகுடு” படத்தில் இருந்து எடுத்து விட்டார்கள்.
பீஷ்ம ஏகாதசியான நேற்று அந்த படத்தில் தான் பீஷ்மராக நடித்திருந்த புகைப்படங்களை பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.
“எனது தந்தை என்.டி.ஆர். இளம் வயதிலேயே பீஷ்மராக நடித்தார். அந்த பீஷ்மர் வேடம் எனக்கு பிடிக்கும். கதாநாயகுடு படத்தில் பீஷ்மர் வேடத்தை சேர்க்க முடியவில்லை. எனவே ரசிகர்கள் பார்வைக்கு, அதன் ஸ்டில்களை இன்று வெளியிடுகிறேன்” என பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அந்த போட்டோக்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– பா. பாரதி