டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது.
பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, மாநில அரசுகள் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.