கோவை :

ரடங்கு நேரத்தில் கோவில்-குளம், பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், என்று அனைத்து இடங்களிலும் பசியும் பட்டினியுமாக மக்கள் பரிதவித்து கொண்டிருக்க.

பல்வேறு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், தனிமனிதர்களும் ஓசையின்றி மக்களின் பசியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

தமிழக கட்சிகளும் இது போன்ற உதவிகளை செய்து வந்தாலும், இவர்கள் செய்யும் விளம்பரங்களையும் இந்த மக்கள் தாங்கிக்கொள்ள தான் வேண்டி இருக்கிறது.

தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, (பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி) சார்பில் கோவையில் இன்று உணவு தயாரித்து வழங்கிய நிர்வாகிகள், சாதத்தின் மீது மாநில தலைவர் வினோஜ் படத்தை கேக்குகள் மீது போட்டோ போடுவது போல போட்டு விளம்பரம் தேடி இருப்பது அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

பசி பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் உன்னத நோக்கம் உள்ளவர்கள், இது போல் விளம்பரம் தேடுவதை கண்டிக்காமல், இதை தனது ட்விட்டரில் பதிவிட்டு, நான் இன்னும் சில நாள் வீட்டில் இருந்தால் இந்த படத்தில் உள்ளது போல் மாறிவிடுவேன் என்று தனது உருவ அமைப்பை பற்றி சம்பந்தப்பட்டவர் கமெண்ட் செய்திருப்பது தான் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.