சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர நடத்தப்படும் நுழைவுத்தேர்வான கியூட் தேர்வு (COMMON UNIVERSITY ENTRANCE TEST (CUET) ) ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நாளை 2வது கட்ட தேர்வு நாளை மறுதினம் (ஆகஸ்டு 4ந்தேதி) தொடங்குகிறது. மேலும், முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்து உள்ளர்.
மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் சேருவதற்காக ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வு கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, ஜூலை 16,ஜூலை 19,ஜூலை 20,ஆகஸ்ட் 4,ஆகஸ்ட் 5,ஆகஸ்ட் 6,ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 13 மொழிகளில் நாடு முழுவதும் 554 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின்போது,தேர்வு மையம் குழப்படி காரணமாக க ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இளநிலை கியூட் தேர்வு ஆகஸ்டு 4ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவிருக்கும் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான CUET 2022 அட்மிட் கார்டு கட்டம் 2 ஐ நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) இன்று (ஆகஸ்ட் 2) வெளியிடுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்,
CUET 2022 அட்மிட் கார்டு: Cuet.samarth.ac.in விண்ணப்பதாரர்கள் CUET உள்நுழைவு சாளரத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைச் சேர்ப்பதன் மூலம் CUET 2 ஆம் கட்ட அனுமதி அட்டை 2022 ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
அதுபோல நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும் மற்றும் செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.