டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR –  Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையர்கள் , தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் வரும் 4ந்தேதி ( நவ.4-ம் தேதி)  முதல் தொடங்கும் என்று கூறியவர்,   வரைவுப் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைத்தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே 2 உயா்நிலை கூட்டங்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசியதாவது; பீகாரில் முதல் கட்டச் சிறப்புத் திருத்தப் பணி நிறைவடைந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 12 இடங்கள் இந்தப் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) இடம்பெறும். இந்தச் செயல்முறைகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சிறப்புத் திருத்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்:

அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்

அசாம் நீக்கம்:  2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்முறையின் காரணமாக அசாம் மாநிலத்தில் மட்டும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணி நடைபெறாது.

மேலும், தீவிர சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, அதில்,  ஆதார் அட்டை பயன்பாடு: வாக்காளர்களை அடையாளம் காணுவதற்கு மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையர் குமார் விளக்கினார்.

பயிற்சி மற்றும் களப்பணி:

சிறப்புத் திருத்தப் பணியின் (SIR) 2-ம் கட்டத்திற்கான அலுவலர்களுக்கான பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை)  தொடங்கும். ஒவ்வொரு அதிகாரியும் போலி வாக்காளர்களைத் தவிர்க்கும் நோக்குடன் 3 முறை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்வார்கள்.  அதாவது,  “பல நேரங்களில், BLO ஒரு வீட்டிற்குச் செல்லும்போது, ​​வாக்காளர்கள் கிடைக்காமல் போகலாம் அல்லது வேறு எங்காவது சென்று கொண்டிருக்கலாம், அவர்கள் பொருத்துதல்/இணைப்பதில் நேரம் எடுத்துக் கொள்ளலாம். எனவே, BLOக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை வருவார்கள்.

இலக்கு: தகுதியுள்ள வாக்காளர் யாரும் விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளர் எவரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கவும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணி உறுதி செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.

 புலம்பெயர்ந்தோரின் பிரச்சினையைத் தீர்க்க, அவர்கள் இதை ஆன்லைனிலும் செய்யலாம். நகர்ப்புற வாக்காளர்களுக்கு பகலில் அலுவலக நேரம் இருப்பதால், அவர்களும் அதை ஆன்லைனிலும் செய்யலாம்.

BLOக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைக் கொடுக்கும்போது, ​​வாக்காளர் கையொப்பமிட்ட பிறகு அதைத் திருப்பித் தர வேண்டும். எனவே, வாக்காளர் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ, அவர்களால் அதில் கையொப்பமிட முடியாது. அத்தகைய வாக்காளர்களை அடையாளம் காண்பது BLOவின் பொறுப்பாகும்…”

முந்தைய சிறப்புத் திருத்தப் பணி போன்ற ஏற்கனவே உள்ள விவரங்கள் உடன் படிவங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும்.

முன்னதாகப் பீகாரில் நடைபெற்ற முதல் கட்டச் சிறப்புத் திருத்தப் பணியைப் பற்றிக் குறிப்பிட்ட ஞானேஷ்குமார், “பீகாரில் 7.5 கோடி மக்கள் இந்தச் சிறப்புத் திருத்தப் பணியில் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலைச் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைத்ததால், முதல் கட்டத்திற்கு எதிராக யாரும் மேல்முறையீடும் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தேவைக்கான காரணங்கள்

அடிக்கடி இடப்பெயர்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பதிவு செய்தல், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, மற்றும் வெளிநாட்டவர்கள் தவறாகச் சேர்க்கப்படுவது போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) இதுவரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2002 முதல் 2004 வரை நடைபெற்றது.

இவ்வாறு கூறினார்.