சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் மேலும் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், இதன் மூலம் 3237 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, 1030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பாடங்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.