டெல்லி: அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக  அறிவித்து உலக மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியதுடன், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த  தடுப்பூசி தயாரிப்பு வெற்றிக்காக,  ஜெர்மனியின் செல்வந்தர்களான மருத்துவ தம்பதியினர் தங்களை அர்ப்பணித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 2021 ஜனவரியில் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிடும் என எதிர்பாரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில்,  அமெரிக்காவைச்சேர்ந்த பிஃபைசர்  (PFizer) நிறுவனம், கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், 90 சதவிகிதம் செயல்திறன் உடையதாக இருப்பதாகவும் அறிவித்தது. இது உலக நாடுகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க நிறுவனமான  PFizer நிறுவனத்தின் பெயர் வெளியானாலும், அந்த தடுப்பூசி அந்நிறுவனத்தின் தனித்தயாரிப்பு இல்லை என்பதும், ஜெர்மன் நிறுவனமான பயோடெக் நிறுவனத்துடன் இணைந்துதான் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயோஎன்டெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் பின்னணியில் இருந்து பணியாற்றியது, துருக்கியை சேர்ந்த கோடீஸ்வர மருத்துவ தம்பதிகள் என்பதும், அவர்களின் பெயர்   உகுர் சாஹின் (55) மற்றும் வ் (53) என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மருத்துவர்களின் ஆராய்ச்சி மீதான காதல் காரணமாகவே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக பாராட்டப்படுகிறது.  இவர்கள்,  தங்கள் திருமண நாளில் கூட, ஆய்வகத்துக்கு வந்து பணி செய்ய அவர்கள் இருவரும் தயங்கவில்லை என்பதும் அவர்கள் தடுப்பூசி தயாரிப்பு பணியில் எந்த அளவுக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

‘கனவுக் குழு’ என்று புகழப்படும் இந்த மருத்துவர் தம்பதியினர், கடந்த  2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய புற்றுநோய் நிபுணர் கிறிஸ்டோஃப் ஹூபருடன் இணைந்து  பயோஎன்டெக் நிறுவனத்தை நிறுவினர்.

இந்த ஆராய்சி தம்பதியின் மருத்துவரான  உகுர் சாஹின் எளிய பின்னணியிலிருந்து வந்தவர் என்பதும், தற்போது பல கோடி மதிப்புடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான இவர், ஜெர்மனியின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்  தனது  கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் இன்றளவும்  எளிமையாக தற்போதும் சைக்கிள் மூலமே பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் குறித்து படிப்பதில்தான் ஆர்வம் காட்டுவாராம் சாஹின் மற்றும் அவரது மனைவி  ஆகியோர்  புற்றுநோய், காசநோய் ஆய்வுகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பது பாராட்டக்கூடியவர்கள்தானே…

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனையிலிருந்து வெற்றிகரமான தரவைக் காண்பிக்கும் முதல் மருந்து தயாரிப்பாளர்கள் ஃபைசர் மற்றும் ஜெர்மன் கூட்டாளர் பயோஎன்டெக். இதுவரை 43,000 க்கும் அதிகமானவர்களின் சோதனையில் 94 பேர் இதுவரை கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாகவும், அவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உண்மையான தடுப்பூசி பெறவில்லை என்றும்  கூறப்படுகிறது.

ஃபைசரின் அடுத்த கட்டம் அமெரிக்காவில் ‘அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு’ விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக அவர்கள் இரண்டு மாத மதிப்புள்ள பாதுகாப்புத் தரவைப் பெற்றவுடன் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (எஃப்.டி.ஏ) செல்ல வேண்டியிருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தடுப்பூசி  இங்கிலாந்தால் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.  அவர்களுக்கு  இரண்டு தவணைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதனபடி,   கிறிஸ்மஸுக்கு முன்னர் இங்கிலாந்தில் 10 மில்லியன்கள் கொடுக்கப்பட வேண்டும்.

கிறிஸ்மஸுக்கு முன்னர் இங்கிலாந்து ஒரு தடுப்பூசியைப் பெற முடியும் என்று சுகாதாரத் தலைவர்கள் பலமுறை ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பது ஒரே தடையாக உள்ளது.