டில்லி,
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா முயற்சித்து வருகிறார்.
தற்போதைய முதல்வர் ஓபிஎஸ் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை காத்திருக்கலாம் என்று கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்கா மல் தாமதம் செய்து வருகிறார்.
இதற்கிடையில், சசிகலாவுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நேற்று கவர்னரை சந்தித்து, சசிகலாவை பதவி ஏற்க அழைக்கும்படி வற்புறுத்தினார். கவர்னர் காலதாமதம் செய்தால் குதிரை பேரத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு தொடர முடியும் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில்,
தமிழகத்தில் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சசிகலாவை ஆட்சியமைப்பதில் ஆளுநர் தாமதம் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதற்கிடையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், சசிகலா முதல்வராக பதவி ஏற்பது குறித்த வழக்கில் எந்தவொரு ஆணையும் பிறப்பிக்கக்கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.