‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் தற்போது இயக்கி வரும் “பெட்ரோமாக்ஸ்” ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்திற்கு “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த படம் வருகின்ற அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.