டில்லி

டந்த 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து டீசல் விற்பனை குறைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் இயங்குவது வெகுவாக குறைந்தது.

அதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையும் நன்கு குறைந்தது.

தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை 2.2% அதிகரித்து 9.65 லட்சம் டன்னாகி உள்ளது.

அதே வேளையில் டீசல் விற்பனை வீழ்ச்சி அடைந்து21.3 லட்சம் டன்னாகி உள்ளது.

விமான எரிபொருள் விற்பனை 60% அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு விற்பனை12.5% அதிகம் ஆகி உள்ளது.