சென்னை

ன்று சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சரவதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதையொட்டி தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.

கொரோனா கால கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்தது.  ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கவில்லை.   மாறாக மத்திய அரசின் கலால் உள்ளிட்ட வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.

தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.  இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.   அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.106.04க்கும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.102.25க்கும் விற்பனை ஆகிறது.