திருவள்ளூர்

சென்னைய அடுத்த திருவள்ளூர் அருகே  இந்து மக்கள் கட்சியின் பிரபலத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் கிளம்பாக்கம் ஆகும்.   இந்த கிராமத்தில் வசித்து வரும் சரத்குமார் என்பவர் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.   அந்தப் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் பிரபலங்களில் இவரும் ஒருவர்

நேற்று இவர் வீட்டின் மீது அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஓடி விட்டனர்.   இதனால் அவர் வீட்டில் உள்ள கட்டில் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.   பெரிய பாளயம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.   இச்சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

[youtube-feed feed=1]