பெட்ரோல், டீசல் விலை கடிவாளம் இல்லாத குதிரையாக 100 ஐ தாண்டி வெற்றிக்களிப்புடன் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏறிக்கொண்டே செல்வது சாமானிய மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக விலை உயர்ந்ததால், சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 103.92 ரூபாய்க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 99.92 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 118.96 ரூபாயாகவும், டீசல் ரூ. 109.79 ஆகவும் உள்ளது.

முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் :

நகரம் பெட்ரோல் விலை டீசல் விலை
மும்பை 112.78 103.63
டெல்லி 106.89 95.62
சென்னை 103.92 99.92
கொல்கத்தா 107.45 98.73
போபால் 115.5 104.86
ஐதராபாத் 111.14 104.28
பெங்களூரு 110.57 101.45
கவுகாத்தி 102.82 95.35
லக்னோ 103.82 96.04
காந்திநகர் 103.75 103.24
திருவனந்தபுரம் 109.1 102.73
கங்காநகர் 118.96 109.79

 

பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நாட்டு மக்களை பதற வைத்திருக்கும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடியின் உரையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.