சென்னை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6 நாட்களாக அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. தற்போது நட்ந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் காரணமாக விலை மாற்றப்படாமல் இருந்தது.
தற்போது தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முதலில் மொத்த விலையில் டீசல் வாங்குவோருக்கு விலை அதிகரிக்கப்பட்டது. பிறகு சில்லறையில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும், டிசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.10.4.90 எனவும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.95க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயர்ந்துள்ளது. டிசல் விலை லிட்டருக்கு ரூ.3.57 உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். டிசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.