சென்னை
தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய், போக்குவரத்து, ஆகியவற்றைக் கணக்கிட்டு தினசரி விலையை மாற்றி அமைக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில் கொரோனா தாக்கம் காரணமாகப் போக்குவரத்து மற்றும் தொழிலகங்கள் செயல்பாடு முழுவதுமாக நின்று போயின.
கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்து எதிர்மறையில் இறங்கியது.
ஆயினும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை.
இந்நிலையில் நேற்று கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாம் நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.77.08 என விற்கப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 49 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.69.74 என விற்கப்படுகிறது