சென்னை

நாடெங்கும் தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்ந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.   கடந்த ஜனவரி மாதம் முதலே பெட்ரோல் மற்ரும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.

இடையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் விலையைக் குறைக்கவில்லை.   தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை ஒட்டி அடிக்கடி விலை உயர்வு அதிகரிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் இன்று தொடர்ந்து 6 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.106.35 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.102.59 ஆகவும் விற்பனையாகிறது. 

டெல்லியில் பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.109.69 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.98.42 ஆகவும் விற்பனையாகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.115.50க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.106.62 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.35 க்கும், டீசல்  ஒரு லிட்டர் ரூ.101.56 க்கும் விற்பனையாகிறது