சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றைய  பெட்ரோல் விலை லிட்டர்  ரூ.78.78 காசுகள் என்றும்,  டீசல் விலை லிட்டர் ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல் காரணமாக கடந்த 1 மாதமாக விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 12ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவை தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலைகளின் உயர்வு தினசரி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இந்நிலையில்   பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் உள்ளன.

பெட்ரோல் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரலாறு காணாத இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.