வாஷிங்டன்

வெள்ளை மாளிகை இணைய தளத்தில் எச் 4 விசா வழங்கப்பட்டவர்களுக்கு பணி புரிய தடையை நீக்க கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

அமெரிகா நாட்டு நிறுவனங்களில் பணி புரிவோருக்காக எச் 1 பி விசா வழங்கப்படுகிறது.   இந்த விசாவின் மூலம் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் பணி புரிந்து வருகின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இவ்வாறு  பணி புரிபவர்களின் மனைவி அல்லது கணவரும் அமெரிகாவில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த எச்1பி விசாவை பெற்றவரின் வாழ்க்கை துணவருக்கு எச் 4 விசா வழங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.    இந்த எச் 4 விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் பணி புரியவோ அல்லது வர்த்தகம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதனால் பல இந்தியர்கள் அவதியுற்றுள்ளனர்.

அவ்வாறு பணி புரிய அல்லது வர்த்தகம் நடத்த அரசு வேலைவாய்ப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும்.   அவ்வாறு ஒப்புதலை பெறாதவர்க பணி புரியவோ வர்த்தகம் நடத்தவோ முடியாது.   அரசின் புதிய சட்டப்படி கணவன் மனைவி ஆகிய இருவரும் அமெரிக்காவில் பணி  புரிய தடை விதிக்கப்பட உள்ளது.

இதை ஒட்டி வெள்ளை மாளிகை இணைய தளத்தில் இந்தியர் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் இந்த ஒப்புதல் பெறும் உத்தரவை ரத்து செய்யக் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.   நேற்று மாலை 5 மணி வரை இவ்வாறு 43,332 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   ஒரு மாத காலகட்டத்தில் இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால் வெள்ளை மாளிகை நிர்வாகம் இது குறித்து 60 நாட்களில் முடிவெடுக்கும்.