ஃப்ளாரிடா: விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடைபயண நிகழ்வு, மார்ச் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னி மெக்லெய்ன் ஆகிய விண்வெளி வீராங்கணைகள்தான், விண்வெளி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். கடந்த கோடைகாலத்தில், விண்வெளி நிலையத்தில் பொறுத்தப்பட்ட பேட்டரிகளை மாற்றும் பொருட்டு, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட இரண்டு வீராங்கணைகளுக்கும், தரையிலிருந்து உதவுவோர், மேரி லாரன்ஸ் மற்றும் கிறிஸ்டன் ஃபேஸியோல் ஆகிய இரண்டு பெண்கள்!

கடந்த 1984ம் ஆண்டு, அப்போதைய சோவியத் யூனியனைச் சார்ந்த ஸ்வெட்லனா சாவிட்ஸ்கயா என்பவர்தான், விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, 35 ஆண்டுகள் கழித்து, தற்போது, முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்குகொள்ளும் விண்வெளி நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை நிகழ்ந்த விண்வெளி நடைபயணங்களில் முழுவதும் ஆண்கள் அல்லது ஆண்களோடு சேர்ந்து பெண்கள் பங்குகொண்ட விண்வெளி நடைபயணங்கள்தான் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி