சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாக உள்பட ஒருசில கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதே போல, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன.
இந் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான சின்னத்தில் அந்தக் கட்சி உறுப்பினர் மட்டுமே போட்டியிட முடியும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.