மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் தனது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சயீப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தபோது அதிகாலை 2 மணியளவில் சத்தம்கேட்டு சயீப் அலிகான் எழுந்தார்.

சயீஃப் வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர், வீட்டு வேலைக்கார பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் மர்மநபர் புகுந்ததை பார்த்து நடிகர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த நபரை பிடிக்க முயன்றார். அப்போது அந்த நபர், நடிகர் சயீப் அலிகானை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் சயீஃபுக்கு உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

உடனே கத்தியால் குத்திய நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.  வீட்டில் இருந்தவர்கள்  வீட்டில் இருந்தவர்கள் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த சயீப் அலிகானை மீட்டு பாந்திரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தற்போது சயீப் அலிகான் நலமாக உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபர், எதற்காக அவரது வீட்டுக்குள் நுழைந்து தாக்கினார் என்பது குறித்து  காவல்துறையினர்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிஓடிய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபரை பாந்திரா போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]