திருச்சி

நிபா வைரசால் தாக்கப்பட்ட ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் வவ்வால் மூலம் பரவும் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.   மாநில அரசும் மத்திய அரசும் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இந்த வைரசுக்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழகத்தில் புத்தா நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி.   இவர் கேரளாவில் சாலை அமைக்கும் பணியில் பணி புரிந்தவர்.  தற்போது தமிழ்நாடு வந்துள்ளார்.  வந்த இடத்தில் உடல்நிலை கோளாறு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடந்த பரிசோதனையில் இவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து கேரளாவில் இருந்து மருங்காபுரிக்கு திரும்பிய சுமார் 20 பேர் தங்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு சிகிச்சை அளிக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.