சென்னை:  சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும்எ ன  சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில்  பல லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து   சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.  ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி அன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

முன்னதாக   ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளையின் தலைமையில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் தங்கள் தலையில் ஏந்தி சபரிமலைக்கு பாதயாத்திரையாக எடுத்துச் சென்றனர். பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இம்முறை ராஜராஜ வர்மா ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

இதையடுத்து ஜனவரி 14ந்தேதி  மகரவிளக்கு ஜோதி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த முடிந்த பின்பும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதனால்  ஜனவரி 19ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. 19ந்தேதியுடன பக்தர்களுக்கான அனுமதி முடிந்து,  ஜனவரி 20ஆம் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.