சென்னை

காவல்துறையினர் சென்னை நகரில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ளனர்.

வருகிற 7-ந்தேதி நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை  கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளது. எனவே பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

காவல்துறையினர், சென்னையில் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ளனர். வர்ய்ன் 15-ந்தேதி அன்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பாதுகாப்புப் பணியில் 16,500 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.