குற்றாலம்

ன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கடந்த 17 ஆம் தேதி குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்தத் தடை 7-வது நாளாக நீடித்தது.

மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் நேற்று  குற்றால அருவிகளில்  ஆய்வு மேற்கொண்டனர்.  வெள்ளத்தின் போது அபாய ஒலிகளை முன்கூட்டியே ஒலிக்கச் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது., பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் உடை மாற்றும் அறை, தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.

நேற்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்

”பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை 4.00 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பழைய குற்றால அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நீராட அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்  மேலும்  ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுவஜுறட்க்ய், அணைக்கட்டு பகுதிகளில் நீராட தடை தொடர்ந்து நீடிக்கிறது”

என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kutralam, Main falls, bathing permission, from today evening,