ராமேஸ்வரம்

தை அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

தை அமாவாசை தினத்தன்று பலரும் புனிதத் தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாகும்.  அவ்வகையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கமாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அதில் ஒன்றாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அமாவாசை அன்று புனித நீராடவும் மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணமாக அளிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக நாளை தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.