சென்னை: சென்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் பகுதியில்  ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. இதை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று வழக்கம்போல போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

 இதற்கிடையில்,  பல கோடி வரி பாக்கிக்காக தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்ட ரேஸ் கோர்ஸ் மைதானமான,  118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. தொடர்ந்து, அங்கு நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ர் ஆய்வு செய்தார்.  அதன் தொடர்ச்சியாக ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி குறித்தும் நேரில் சென்று  ஆய்வு செய்தார்.

தொர்ந்து, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை களை அகற்றும் பணிகள் தீவிரம் நாராயணபுரம் ஏரியில் ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்,   “வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும்   மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளன என்று கூறியவர்,  வடகிழக்கு பருவமழை குறித்து,   “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 3 மாதமாகவே செய்து வந்தோம்”  என்றும்,  “வெள்ள மீட்பு பணிகளில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் கூறினார்.