சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11ராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதி அளித்தார்.