நெட்டிசன்:
கௌதம் சாம் (Gowtham Sham) அவர்களின் முகநூல் பதிவு:
11-9-1938 சென்னை கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார் பெரியார்.
கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ வெட்கமோ கிடையாது. மத, மூட நம்பிக்கையில் ஊறிவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தாங்கள் அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.
என்று தமிழ்த் தேசியத்திற்கு, தமிழ்நாடு பிரிவினைக்குப் போராடிய பெரியார், தமிழன் என்றச் சொல்லைவிட்டு, திராவிடன் என்றச் சொல்லை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
“திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டுத் தமிழன் என்று சொல்லியாவது தமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அதுவும் நடவாதபடி பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் என்று உள்ளே புகுந்துவிடுகிறான்.”
(பெரியாரின் 12-10-1955 தேசிய அறிக்கை)
பார்பனர்களை எதிர்த்த பெரியார் கன்னடர்களையும், மலையாளிகளையும் எதிர்த்தார்.
(பெரியார் சிந்தனைகள் பக்கம் 692)
அதுமட்டுமல்ல, பாப்பானுக்காகத் தமிழன் என்ற பெயரை விலக்கி திராவிடன் என்று பெயர் வைக்க வேண்டியுள்ளதே! என்று வேதனையும் பட்டுள்ளார்.
(22-10-1955 பெரியார் அறிக்கை)
********************************************
600 ஆண்டுகளுக்கு மேலாக நம் தமிழ்நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கன்னட,மலையாள,தெலுங்கர்களை, சாதி பார்த்து அறிந்து இவர்களை தமிழர்கள் இல்லை எனச் சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள். தமிழனை அடிமைப்படுத்தி முட்டாளாக்கிய ஆரிய பார்பனர்களை தமிழர்கள் என்கிறார்கள்.
இவர்கள் யாரைக் காப்பாற்றுகிறார்கள்? பார்பனர்களைக் காப்பாற்றுகிறார்கள். இவர்கள்தான் தமிழ்தேசியப் போராளிகள் என்றுத் தங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனத் தமிழ்த் தேசியவாதிகள்..!
பெரியார் கேட்டது திராவிடத் தமிழ்த் தேசியம்! இவர்கள் கேட்பது பார்ப்பனத் தமிழ்த் தேசியம்!