சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றார்.

  பெரியார் என அழைப்பப்படும்   ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி ) பிறந்த நாளான செப்டம்பர் 17ந்தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவரது பிறந்தநாள் இன்று திமுக மற்றும் திகவினரால் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும், பெரியார் பிற்தநாளான இன்று அரசு அலவலகங்களில்,  “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என்று கடந்த 2021ம் ஆண்டு  அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டவ ருகிறது.

இந்த நிலையில், அன்று  தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், , பெரியாரின் உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், சமூகநீதி நாள் உறுதிமொழியை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்

. உறுதிமொழியை முதல்-அமைச்சர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.