சென்னை: தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் சாதிமத வேறுபாடுகளை களையும் வகையில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி மக்களிடையே மூட நம்பிக்கை‘களையும், பெண்ணுரிமைகளுக்காகவும் போராடியவர் பெரியார். அவரது 142-வது பிறந்த நாள் இன்று தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Patrikai.com official YouTube Channel