சென்னை:

ந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியாரின் பிறந்த தினம் நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் அரசு சார்பில், அண்ணாசாலையில் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சிலையின் கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் உருவப் படமும் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அங்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

பெரியார் யார்?

வெங்கடப்ப நாயக்கர்- சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 1879-ஆம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியாக பிறந்தவர் தந்தை பெரியார்.  1938-ம் ஆண்டு‘  13 நவம்பர் 13ந்தேதி நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.இராம சாமிக்கு ‘பெரியார்’ என பட்டம் வழங்கப்பட்டது. இவர், கேரள மாநிலத்தில் தீண்டாமையை எதிர்த்து போராடியதால், அவருக்கு ’வைக்கம் வீரர்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.

பகுத்தறிவு சிந்தாந்தங்களை மக்களிடையே ஊக்குவித்து வந்தால், பகுத்தறிவுப் பகலவன் என்றும் போற்றப்படு கிறது.  பெரியார்  1920-ஆம் ஆண்டு காந்தியடிகள் மீது பற்றுகொண்டு காங்கிரசில் சேர்ந்தார். ஆனால், அதன் கொள்கைகள் பிடிக்காத நிலையில்,  1925-ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி ‘குடியரசு’ வார இதழை தொடங்கினார். அதில், சாதி ஒழிப்பு, கலப்புமணம், கைம்பெண் மறுமணம், புராண எதிர்ப்பு குறித்து கட்டுரைகள் எழுதினார். 1944-ல் நீதிக்கட்சியினை திராவிடர் கழகமாக மாற்றினார். 24 டிசம்பர் 1973 அன்று தந்தை பெரியார் இயற்கை எய்தினார்.