சென்னை
கொலையுண்ட ஆய்வாளர் பெரிய பாண்டியுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த நகைக் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அதே குழுவில் உள்ள கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலிசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் மேல் விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார் பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்திருந்தது முனிசேகரின் துப்பாக்கியில் இருந்த குண்டு என்று தெரிவித்துள்ளனர். முனிசேகர் கொள்ளையர்களை நோக்க்கி சுட்ட போது பெரிய பாண்டியன் மீது குண்டு பாயந்தது என காவல்துறை அதிகார் பின்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் போலீசார் ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிந்துள்ளனர். முனிசேகரின் அஜாக்கிரதையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முனிசேகர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
நகைக்கடைக் கொள்ளை நடைபெற்றது முனிசேகர் பணி புரியும் கொளத்தூர் சரகத்தில் உள்ளது என்பதும் இந்தி தெரிந்தவர் என்பதால் மதுரவாயல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் முனிசேகருடன் அனுப்பப் பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.