சென்னை,
மருத்துவ சிகிச்சை பெற வசதியாக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் மாற்றப்படுகிறார்.
கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவ்வப்போது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்ற போது, மருத்துவர்கள் அவரை தொடர் சிகிச்சை எடுக்க வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து பேரறிவாளன் தரப்பிலும், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சிறைக்கு மாற்ற சிறைத்துறை எடிஜிபிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.வழங்கி விட்டநிலையில்,பேரறிவாளர் இன்று புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து அவர் தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.