சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளதால், பரோலில் இருந்து வரும் அவர், இன்று காலை  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார். ஜாமின்  உத்தரவு நகல் பெற, அவர் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசிடம் பரோல்  பெற்று சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி கடந்த 9 மாதங்களாக பரோலில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில், அவர் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சுமார் 6 ஆண்டுகள் கழிப்பு உச்நிதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கி உள்ளது. 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2022ம் ஆண்டு மார்ச்  10ம் தேதி உச்சநீதிமன்றம் பேரறிவாளுக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு  28ம் தேதி புழல் சிறையில் இருந்து பரோலில்  வெளியே வந்த பேரறிவாளன், இன்று மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 11-ஆம் தேதி புழல் சிறைக்கு  பாதுகாப்புடன் வந்த பேரறிவாளனிடம், உச்சநீதிமன்றம் வழங்கி ஜாமின் உத்தரவு நகர் கிடைக்கவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டார். இந்தநிலையில், அவர் இன்று மீண்டும் புழல் சிறைக்கு வந்துள்ளார்.

உச்சநீதிமன்ற ஜாமினைத் தொடர்ந்து அவரது பரோல் ரத்து செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட உள்ளார்.