வேலூர்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான பேரறிவாளன்  உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991ம் ஆண்டு மே மாதம் 21ந்தேதி  ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை காரணமாக கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஏற்கனவே பலமுறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இன்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கண் பார்வைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்து வர்கள் கூறினர்.

இதையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.