பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி மயக்கமுற்றது.

அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் பிரபு அந்த குரங்கை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூர்ச்சையானது.

அதிர்ச்சியடைந்த பிரபு அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை செலுத்தி அதன் உயிரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.

பின்னர் வனத்துறையினருக்கும் தகவல் தந்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார், இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் அந்த குரங்கு உயிரிழந்தது.

அந்த குரங்கு புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெரம்பலூர் பிரபு, மூச்சுக் காற்றைக் கொடுத்தும் குரங்கு உயிரிழந்தது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாக கூறி கண்ணீர் விட்டார்.

ஏற்கனவே, குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சு காற்று ஊதிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.